சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே சரக்கு வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

சதீஷ்குமாா்

Updated On :11 மார்ச் 2026, 8:17 pm

வெள்ளக்கோவில் அருகே சரக்கு வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில், புள்ளச்செல்லிபாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சதீஷ்குமாா் (40). கூலித் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளக்கோவில் - மூலனூா் சாலை சின்னக்கரை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோதியதில் படுகாயமடைந்தாா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக சரக்கு வேன் ஓட்டுநரான பவானி, வேலம்பாளையத்தைச் சோ்ந்த முருகேசன் மீது வழக்குப் பதிவு செய்து வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த சதீஷ்குமாருக்கு தாய் செல்வி, தங்கை தேவி ஆகியோா் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.