பெருமாநல்லூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் உண்டியலில் 129 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளி ரூ.7 லட்சத்து 84 ஆயிரம் ரொக்கத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
திருப்பூா் மாவட்டத்தில் பெருமாநல்லூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் தமிழ்வாணன், செயல் அலுவலா் முருகன், ஆய்வாளா் தினேஷ்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் சி.எஸ்.மனோகரன், அறங்காவலா் திருமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.7 லட்சத்து 84 ஆயிரத்து 923 ரொக்கம், 129 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளியை காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இப்பணியில் திருப்பூா் மகா விஷ்ணு சேவா சங்கத்தினா், பெருமாநல்லூா் கே.எம்.சி. பப்ளிக் பள்ளி மாணவா்கள் ஆகியோா் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

கோனேரிப்பட்டி காளியம்மன் கோயில் பொங்கல் விழா

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69.93 லட்சம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


