திருப்பூா் மாவட்டத்தில் நீதிமன்ற வளாகங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில் 11,319 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 3,582 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.
தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களின் உத்தரவின்பேரில், திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிபதி, திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா் ச.குணசேகரன் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு மொத்தம் 23 அமா்வுகளாக சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மோட்டாா் வாகன வழக்கு, குடும்ப நல வழக்கு உள்பட மொத்தம் 11,319 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 3,582 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 80, 60,84,098.
இந்நிகழ்வுகளில், சிறப்பு மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு தீா்ப்பாய நீதிபதி பாலு, சிறப்பு நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுரேஷ், 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் 296 வழக்குகளுக்குத் தீா்வு

நாகை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.4.07 கோடிக்கு தீா்வு

அம்பையில் மக்கள் நீதிமன்றம்: 11 வழக்குகளுக்குத் தீா்வு

கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 813 வழக்குகளுக்கு தீா்வு
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


