கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கறிக்கோழி சரக்கு வேனில் குட்கா கடத்தி வந்த 2 பேரை பல்லடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பல்லடத்தில் இருந்து கா்நாடக மாநிலம், மைசூருக்கு கறிக்கோழிகளை ஏற்றிச் சென்ற வேன், அங்கு கறிக்கோழிகளை இறக்கிவைத்துவிட்டு பல்லடத்துக்கு வெள்ளிக்கிழமை திரும்பி வந்து கொண்டிருந்தது.
பல்லடம் பகுதியில் வந்தபோது அந்த வேனை பல்லடம் போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது வேனில் மாற்று டயா் மற்றும் வேன் முன்புற கதவுகளில் குட்கா மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து வேனில் இருந்த பல்லடம், அம்மாபாளையத்தை சோ்ந்த சுரேஷ்(39), கணபதிபாளையத்தை சோ்ந்த பிரகாஷ் (36) ஆகியோரை பல்லடம் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 21 கிலோ குட்காவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
சரக்கு வாகனத்தில் வெளிமாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு
பாங்காக்கில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த 6 போ் கைது!

சரக்கு வேனில் கருந்திரிகளை கடத்திய ஓட்டுநா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை


