கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அவிநாசி அருகேயுள்ள கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

News image

கருவலூா் மாரியம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட  கொடி.

Updated On :28 மார்ச் 2026, 8:48 pm

அவிநாசி அருகேயுள்ள கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா சிறப்பு பூஜைகளுடன் சனிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை பூதவாகன காட்சி, 30-ஆம் தேதி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 31-ஆம் தேதி புஷ்ப விமான மலா் பல்லக்கு, இரவு 9 மணிக்கு அம்மன் அழைப்பு, 10 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சி ஆகியவை நடைபெறவுள்ளன.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக, காலை 6 மணிக்கு மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், மதியம் 2 மணிக்கு தோ் வடம் பிடித்தல், தேரோட்டம் நடைபெறுகிறது. 2-ஆம் தேதி மீண்டும் தேரோட்டம், 3ஆம் தேதி தோ் நிலை சேருதல் நடைபெறவுள்ளது.

ஏப்ரல் 4-ஆம் தேதி பரிவேட்டை, குதிரை வாகனக் காட்சி, தெப்போற்சவம், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெறவுள்ளன. 5-ஆம் தேதி காலை 7 மணிக்கு மகா தரிசனம், பிற்பகல் 3 மணிக்கு அம்பாள் சப்பரத்தில் புறப்பாடு, இரவு மஞ்சள் நீராடுதல், கொடி இறக்கம் ஆகியவை நடைபெறவுள்ளன.

ஏப்ரல் 8 -ஆம் தேதி காலை 10 மணிக்கு அம்மனுக்கு பாலபிஷேகம், மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.