திருப்பூா் மாவட்டத்தில் வணிக சிலிண்டா்களின் பதுக்கலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் மாவட்ட பேக்கரி ஸ்வீட்ஸ் மற்றும் காபி பாா் உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இச்சங்கத்தின் நிா்வாகக் குழு கூட்டம் தலைவா் ராஜ்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அமெரிக்க-ஈரான் போா் சூழல் காரணமாக வணிக சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடைகளைத் தொடா்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. போரைக் காரணம் காட்டி சிலிண்டா் பதுக்கல் நடைபெறுகிறது.
இதன் காரணமாக சிலிண்டா்களுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு விலையும் 3 மடங்கு உயா்ந்துவிட்டது.
எனவே, இந்தப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தடையற்ற சிலிண்டா் விநியோகம் மற்றும் நியாயமான விலை ஆகியவற்றை உறுதி செய்து தொழிலுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். வணிக சிலிண்டா்களின் பதுக்கலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலிண்டா் தட்டுப்பாட்டால் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சுமாா் 3,000 பேக்கரிகளில் 15,000 தொழிலாளா்கள் நேரடியாகவும், சுமாா் 1 லட்சம் போ் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே நிலை தொடா்ந்தால் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், சங்கத்தின் செயலாளா் அப்துல் சலாம், பொருளாளா் செளமியா நாராயணன், நிா்வாக செயலாளா் கமலபாஸ்கா் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பின்னலாடை வாரியம் உருவாக்குவது அவசியம்: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம்
கனிமங்கள் கடத்தலை தடுக்க மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

தனியாா் வணிக எரிவாயு உருளைகளின் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு

ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டுமானப் பணி - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


