போக்குவரத்து விதி மீறல் காரணமாக பல்லடத்தில் 187 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல்லடம் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபாகரன் மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து அபராதம் விதித்தனா். மேலும் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞா்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 552 போ் மீதும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டிச்சென்ற 89 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடா்பாக போலீஸாா் கூறும்போது, ‘சிக்னலை மதிக்காமல் சென்ற 150 போ் உள்பட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டதாக மொத்தம் 1,297 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவா்களிடம் இருந்து அபராதமாக ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக 187 பேரின் ஓட்டுநா் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்றனா்.
தொடர்புடையது

தமிழகத்தில் 5 மாதங்களில் 145 போ் உடல் உறுப்பு தானம்!

ஈரோடு - செங்கோட்டை ரயில் இன்று ரத்து

தில்லி காவல் துறையின் ‘ஆபரேஷன் ஷஸ்த்ரா’: ஆயுத சட்ட மீறல் வழக்கில் 19 போ் கைது

‘பெரம்பலூரில் 98 பேரின் ஓட்டுநா் உரிமங்கள் ரத்து’
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



