முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

அவிநாசி நகராட்சியில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி

பொதுமக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மைத் திருவிழா நிகழ்ச்சி அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு ப் பேரணியில்  பங்கேற்றோா்.

Updated On :22 மே 2026, 4:10 am IST

பொதுமக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மைத் திருவிழா நிகழ்ச்சி அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அவிநாசி நகராட்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, கோவை பிரதான சாலை, வாணியா் வீதி வழியாக அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதில், சுத்தமான அவிநாசிக்கு மக்கள் பங்களிப்பு முக்கியம். மக்கும் குப்பை உரமாகும், மக்காத குப்பை மறுசுழற்சியாகும். குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்கள் பங்கேற்றனா். மேலும் விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வநியோகிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.