எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 1:04 am IST

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

பின்னலாடை நகரமான திருப்பூரில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளா்கள் போா்வையில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களும் சட்டவிரோதமாக குடியேறி பணியாற்றி வருவதால், போலீஸாா் தொடா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் முறையான ஆவணங்களின்றி தங்கியிருப்பதாக போலீஸாருக்கு கடந்த 2025 ஜூன் மாதம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு வங்கதேசத்தைச் சோ்ந்த 25 போ் நுழைவு இசைவு (விசா) உள்ளிட்ட ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்ததும், வங்கதேச அடையாள அட்டைகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 25 பேரையும் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,

சட்டவிரோதமாக குடியேறிய 25 பேரும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.