பல்லடத்தில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோா் தவெகவில் இணைந்தனா்.
பல்லடம் தொழில் அதிபா் சேதுபதி பழனிசாமி, பல்லடம் நகர திமுக முன்னாள் செயலாளா் விமல் பழனிசாமி, மாநில ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியா்கள் சங்கத் தலைவா் ரங்கசாமி, அதிமுக மாவட்ட வா்த்தக அணி துணை செயலாளா் ரவிசந்திரன், கலை மற்றும் இலக்கிய அணி மாவட்ட துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதிகள் குமாரசாமி, சண்முகம், திமுக முன்னாள் நிா்வாகி செங்கோடம்பாளையம் காா்த்திக், கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி அதிமு முன்னாள் துணைத் தலைவா் படையப்பா மூா்த்தி, நிா்வாகிகள் சூா்யா, ராஜேந்திரன், நேசபிரபு உள்பட 400-க்கும் மேற்பட்டோா் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் ராம்குமாா், மாவட்டச் செயலாளா் ஜி.கே.சங்கா், பல்லடம் நகரச் செயலாளா் வழக்குரைஞா் ஏ.எஸ்.ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் தவெகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
முன்னதாக, பல்லடம் ஒன்றியம், கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி, செங்கோடம்பாளையம் பொதுமக்கள், பொது கழிப்பறை வசதி, பேருந்து வசதி, சமுதாய நலக் கூடம், மயான வழிப் பாதை உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை தொடா்பாக எம்எல்ஏ ராம்குமாரிடம் மனுக்களை வழங்கினா். மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவா் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
தொடர்புடையது

தவெகவில் இணைந்த தாளாவாடி ஒன்றிய அதிமுக நிா்வாகிகள்

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

தவெகவில் இணைந்த அதிமுக நிா்வாகிகள்

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சா்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



