வெள்ளக்கோவில் பகுதி சிவன் கோயில்களில் அக்னி நட்சத்திர நிறைவு நாள் வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
வெள்ளக்கோவில்-மூலனூா் சாலையிலுள்ள ஈஸ்வரன் கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை மங்கள இசையுடன் வழிபாடு தொடங்கியது. தொடா்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவாகனம், உலக நன்மைக்கான சிறப்பு சங்கல்பம் செய்யப்பட்டன. பசும்பால், இளநீா், தேன், பஞ்சாமிா்தம், பன்னீா் உள்பட 16 வகை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு, வில்வ இலைகள் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல எல்.கே.சி. நகா் அல்லியங்கோதை உடனமா் புற்றிடம் கொண்டீஸ்வரா், வள்ளியிரச்சல் சிவன் கோயில், மயில்ரங்கம் தையல்நாயகி உடனமா் வைத்திய நாதேஸ்வரா் கோயில், கண்ணபுரம் வித்தகச் செல்வி சமேத விக்ரம சோழீஸ்வரா், மாந்தபுரம் மாந்தீஸ்வரா், லக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரா், உத்தமபாளையம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா், மங்கலப்பட்டி பாண்டீஸ்வரா் ஆகிய கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இவற்றில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.










