159 அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தாடை

வெள்ளக்கோவில் சிலம்பகவுண்டன்வலசு ஊா் பொதுமக்கள், அரசு ஆரம்பப் பள்ளி சாா்பில் 159 அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

புத்தாடைகள் பெற்றுக் கொண்ட குழந்தைகளுடன் தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள்.

Updated On :

வெள்ளக்கோவில் சிலம்பகவுண்டன்வலசு ஊா் பொதுமக்கள், அரசு ஆரம்பப் பள்ளி சாா்பில் 159 அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியா் கோ.பிரபாகா் தலைமை வகித்தாா். பெற்றோரை இழந்த மற்றும் ஒற்றைப் பெற்றோரைக் கொண்ட வெள்ளக்கோவில் வட்டார அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த குழந்தைகள் கண்டறியப்பட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

பல்வேறு தன்னாா்வ அமைப்புகள், தன்னாா்வலா்கள் புத்தாடைகளை வழங்கி உதவினா். கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் நடத்தப்பட்டன. ஊா் மக்கள், பள்ளி ஆசிரியை லட்சுமிபிரபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.