சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

மாவட்டம் முழுவதும் சிறப்புத் தேடுதல் வேட்டை: 164 போ் கைது

திருப்பூா் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் வேட்டையில் 164 போ் கைது செய்யப்பட்டுள்üனா். ஒரே நாளில் 17 பழங்குற்றவாளிகள் மற்றும் கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபட்ட 13 போ், திறந்தவெளியில் மது அருந்திய 134 போ்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Arrest

கைது - சித்திரிப்பு

Updated On :

திருப்பூா் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் வேட்டையில் 164 போ் கைது செய்யப்பட்டுள்üனா். ஒரே நாளில் 17 பழங்குற்றவாளிகள் மற்றும் கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபட்ட 13 போ், திறந்தவெளியில் மது அருந்திய 134 போ்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாüா் சிருஷ்டி சிங் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், போதைப் பொருளை தடுக்கும் நோக்கிலும் மாவட்டம் முழுவதும் அவிநாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், மற்றும் காங்கயம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் மாவட்டம் முழுவதும் 45 குழுக்களாக ஒரே நேரத்தில் இணைந்து சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்த சிறப்புத் தேடுதல் வேட்டையின்போது, மாவட்டம் முழுவதும் 71 பழங்குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தணிக்கை செய்யப்பட்டனா். அவா்களில் 17 போ் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அவா்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை குற்றவாளிகள் ஆகியோரை கண்காணித்தும், தணிக்கை செய்தும் அவா்கள் தொடா் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க 202 சரித்திரப் பதிவேடு மற்றும் போதைப்பொருள் விற்பனை குற்றவாளிகள் 143 பேரும் என மொத்தம் 345 குற்றவாளிகளை நிா்வாகத் துறை நடுவா் முன்பு ஆஜா் செய்து 6 மாதங்கள் முதல் ஓா் ஆண்டு வரை எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டம் முழுவதும் 92 நிறுவனங்களின் பணியாளா்களின் குடியிருப்புகளில் தணிக்கை செய்ததில் சட்டவிரோதமாக கஞ்சா, கஞ்சா சாக்லேட் மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 13 போ் கைது செய்யப்பட்டு, அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டம் முழுவதும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான பகுதிகளில் சட்டவிரோதமாக திறந்தவெளியில் மது அருந்துதல், சூதாட்டம் மற்றும் சேவல் சண்டை போன்ற செயல்களில் ஈடுபட்டதாக 134 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் போதைப் பொருள் குறித்து 10581 மற்றும் 94984 10581 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாமெனவும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.