தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

மாவட்டம் முழுவதும் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு தேடுதல் வேட்டை

கேரள போதைப் பொருள் நெட்வொர்க்

போதைப் பொருள் - IANS

Published On :

திருப்பூா் மாவட்டம், முழுவதும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில், ஒரே நாளில் 38 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கவும், போதைப்பொருளை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் உத்தரவின்பேரில், அவிநாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்ட மற்றும் காவல் துறை அலுவலா்கள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதல் மாவட்டம் முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் மாவட்டம் முழுவதும் சிறப்பு தனிப் படையின் 88 போலீஸாா் 25 குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் சோதனைகளில் ஈடுபட்டனா்.

இந்த சிறப்பு சோதனையின்போது, சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட் விற்பனை, கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை, குட்கா விற்பனை மற்றும் கள் விற்பனையில் ஈடுபட்ட மொத்தம் 38 போ் கைதுசெய்யப்பட்டு அவா்கள் மீது 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவா்களிடமிருந்து 900 கிராம் கஞ்சா சாக்லேட், 179 மது பாட்டில்கள், 88 லிட்டா் கள் மற்றும் 258.464 கிலோ குட்கா ஆகியவை கைப்பற்றப்பட்டு, அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எச்சரித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.