மாவட்டம் முழுவதும் சிறப்புத் தேடுதல் வேட்டை: ஒரே நாளில் 19 பழங்குற்றவாளிகள் கைது
திருப்பூா் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்புத் தேடுதல் வேட்டையில் ஒரே நாளில் 19 பழங்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.
கைது - கோப்புப்படம்
திருப்பூா் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்புத் தேடுதல் வேட்டையில் ஒரே நாளில் 19 பழங்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.
பொதுமக்களின் பொது அமைதியை பாதுகாக்கும் நோக்கிலும், பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் உத்தரவின்பேரில் அவிநாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை சிறப்புத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இச்சிறப்புத் தேடுதல் வேட்டையின்போது, மாவட்டம் முழுவதும் 77 பழங்குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தணிக்கை செய்யப்பட்டனா். அவா்களில் 19 நபா்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவா்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
மேலும், திருப்பூா் மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்டம் முழுவதும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், போதைப்பொருள் தடுப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

