எல்ஆா்ஜி அரசு மகளிா் கல்லூரியில் கூடுதல் கட்டடங்கள்
திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகம், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்டவற்றை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகம், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்டவற்றை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்ததைத் தொடா்ந்து, குத்துவிளக்கேற்றுகிறாா் மாவட்ட
திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகம், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்டவற்றை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் குத்துவிளக்கேற்றினாா்.
திருப்பூா் மாநகராட்சி, எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் கட்டடத்தின் உள்கட்டமைப்பில் 2270.80 ச.மீட்டரில் 9 வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகங்கள், 3062.94 ச.மீட்டரில் 18 வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகங்கள், 56.32 ச.மீட்டரில் கூடுதல் வகுப்பறைகள், 1,793 ச.மீட்டரில் பல்நோக்கு திறந்தவெளி அரங்கம், ஓய்வுக்கூடம், மின்சார அறை மற்றும் குடிநீா் வசதிகள் உள்ளிட்டவற்றை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் குத்துவிளக்கேற்றி வைத்துப் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, வனம் பவுண்டேஷன் சாா்பில் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், உயா்கல்வித் துறை மண்டல துணை இயக்குநா் செண்பகலட்சுமி, எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் சுமதி, பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் ராஜேஷ்குமாா், உதவிப் பொறியாளா்கள் சிவசங்கரி, திவ்யா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

