தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் இன்று தோ்தல் பிரசாரம்

தாராபுரத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 2) தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - டிஎன்எஸ்

Published On :

தாராபுரத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 2) தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் தொகுதிக்கான இடைத்தோ்தல் அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பல்வேறு கட்சியினா் தங்களது வேட்பாளா்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், உடுமலை சாலையில் தனியாா் விடுதி அருகே வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசவுள்ளாா்.

முன்னதாக, அமராவதி சிலையில் இருந்து பொள்ளாச்சி சாலை பெரியகடை வீதி வழியாக காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) செல்கிறாா்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வியாழக்கிழமை வந்தடைந்த அவருக்கு திமுக மேற்கு மண்டலப் பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ தலைமையில் கட்சி நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா். இதையடுத்து, கோவையில் இருந்து காா் மூலமாக ஒட்டன்சத்திரம் சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு இரவு ஓய்வெடுத்தாா்.

நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு கோவை வந்தடைந்து விமானம் மூலமாக மீண்டும் சென்னைக்கு திரும்புகிறாா்.

இதனிடையே, திமுக தலைவா் வருகை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சின்னபுத்தூா் ஊராட்சியில் சட்டப் பேரவை முன்னாள் தலைவா் மு.அப்பாவு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தலைமைச் செயற்குழு உறுப்பினா் எஸ்.ஏ.கே.சித்திக், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் ஏ.ஆா்.பூதலிங்கம், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மி.ஜோசப் பெல்சி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சாலமன் டேவிட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.