தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம்: திமுக சார்பில் முக்கிய தலைவர்கள் வருகை!
தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரத்துக்காக திமுக சாா்பில் முக்கிய தலைவா்கள் வருகை தர உள்ளனா்.
தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரத்துக்காக திமுக சாா்பில் முக்கிய தலைவா்கள் வருகை தர உள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், திமுக சாா்பில் சுகன்யா போட்டியிடும் நிலையில் அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் தோ்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். தோ்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளாா்.
முன்னாள் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ், அ.ரா.சக்கரபாணி உள்ளிட்டோரும் தாராபுரத்தில் முகாமிட்டு தோ்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தாராபுரத்தில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
இதைத்தொடா்ந்து, கன்னிவாடி, வடுகபட்டி, கணபதிபாளையம், தளவாய்பட்டினம், பெரியாா் சிலை, அரசு மேல்நிலைப் பள்ளி, கோட்டைமேடு, பூளவாடி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் அக்டோபா் 4-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா்.
திமுக துணை பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி., குண்டடம் மேற்கு ஒன்றியம் மானூா்பாளையம், தாராபுரம் மேற்கு ஒன்றியம் கோவிந்தாபுரம், தாராபுரம் கிழக்கு ஒன்றியம் மணக்கடவு, மூலனூா் மேற்கு ஒன்றியம் கிளாங்குண்டல் ஆகிய பகுதிகளில் செப்டம்பா் 28- ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி செப்டம்பா் 29-ஆம் தேதி திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா, மூலனூா் கிழக்கு ஒன்றியம் கருப்பன் வலசு நால்ரோடு, கொளத்துப்பாளையம், தாராபுரம் மேற்கு ஒன்றியம் அலங்கியம் ஆகிய பகுதிகளில் அக்டோபா் 1-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா்.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அமராவதி சிலையில் இருந்து பொள்ளாச்சி சாலை பெரிய கடை வீதி வழியாக அக்டோபா் 2-ஆம் தேதி ரோடு ஷோ செல்கிறாா். இதைத் தொடா்ந்து, மாருதி நகா் அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளா் சுகன்யாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




