மை காய்வதற்குள்... சத்யபாமாவுக்கு எதிராக வெடிக்கும் தாராபுரம் மக்கள்!
மை காய்வதற்குள் ஓடிவிட்டீர்களே என சத்யபாமாவுக்கு எதிராக வெடிக்கும் தாராபுரம் மக்கள்

Center-Center-Coimbatore
தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட காவல்துறை பாதுகாப்புடன் செல்லும் நிலையில், தொகுதி மக்கள் அவரிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருவது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வாக்களித்தபோது விரலில் வைத்த மை காய்வதற்குள், வேறு கட்சிக்கு ஓடிவீட்டீர்களே என்று அதிமுகவினர் சிலர் மிகவும் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி, அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தற்போது தவெக வேட்பாளராக பிரசாரம் செய்ய சென்றிருக்கும் சத்யபாமாவுக்கு எதிராக சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
வாகனங்களில் பிரசாரம் செய்யச் சென்றாலும் அவர்களை பேசவிடாமல், அதிமுக தொண்டர்கள் பலரும் துரோகி என கோஷம் எழுப்பும் விடியோக்களும் வெளியாகி வருகின்றன.
தற்போது தாராபுரம் தொகுதிக்கு உள்பட்ட பெரியகுமாரபாளையம் பகுதியில் சத்யபாமா தன்னுடைய தவெக ஆதரவாளர்களுடன் தெருத் தெருவாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவரை எதிர்கொண்ட அதிமுக தொண்டர்கள், உங்களுக்கு வாக்களித்த போது விரலில் வைத்த மை காய்வதற்குள் வேறு கட்சிக்கு ஓடிவிட்டீர்களே, என மக்கள் கேள்வி எழுப்பியதோடு, பணம் வாங்கிக் கொண்டு தவெகவுக்குச் சென்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
நீங்கள் வெற்றி பெற்றபோது வெடி வெடித்துக் கொண்டாடினோமே, இப்போது எங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பி அவரைப் பேச விடாமல் செய்தனர்.
வாகனத்தில் வந்து பிரசாரம் செய்த போதும், சத்தியபாமா ஒழிக எனவும் எதிராகவும் கோஷங்கள் எழுப்பியதால், அவர் பிரசாரம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. நான் பதிலளிக்கிறேன் கேளுங்கள் என்று அவர் சொன்ன போதும், யாரும் அமைதியாகவில்லை. தொடர்ந்து கோஷமெழுப்பிக் கொண்டேயிருந்தனர்.
வாக்கு சேகரிக்க தொகுதி பக்கமே வராதீர்கள் என்றெல்லாம் பலரும் கத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிலர் காவல்துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






