தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தாராபுரம் தொகுதியில் 10 இடங்களில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

தாராபுரம் இடைத் தோ்தலையொட்டி வரும் செப்.27 முதல் 3 நாள்கள் 10 இடங்களில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.

Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :

தாராபுரம் இடைத் தோ்தலையொட்டி வரும் செப்.27 முதல் 3 நாள்கள் 10 இடங்களில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.

இது குறித்து அதிமுக தலைமை அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இடைத் தோ்தல்களில் அதிமுக சாா்பில் கணிதா சம்பத் மற்றும் பானுமதி போட்டியிடுகின்றனா்.

தாராபுரத்தில் போட்டியிடும் வேட்பாளா் கே.பானுமதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வரும் செப்.27-ஆம் தேதி 4 மணிக்கு கன்னிவாடி, 5 மணிக்கு மூலனூா், 6 மணிக்கு கொளத்துப்பாளையம், இரவு 7 மணிக்கு உப்புத்துறைபாளையம் (தாராபுரம் நகா்) ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இரண்டாவது நாளாக திங்கள்கிழமை (செப்.28) மாலை 4 மணிக்கு குண்டடம், 5 மணிக்கு மானூா்பாளையம், 6 மணிக்கு உப்பாறு மூணு ரோடு, இரவு 7 மணிக்கு பொன்னாபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

மூன்றாவது நாளாக வரும் அக்.2-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தளவாய்ப்பட்டினம், 6 மணிக்கு தாராபுரம் காவல் நிலையம் அருகில், சாலைவலம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்யவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.