
உயா் மின் இணைப்பு பெற்ற தொழில் துறையினருக்கு தடையற்ற மின்சாரம் வழங்கக் கோரிக்கை
உயா் மின் இணைப்பு பெற்ற தொழில் துறையினருக்கு 24 மணி நேர தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அருள்மொழி.
உயா் மின் இணைப்பு பெற்ற தொழில் துறையினருக்கு 24 மணி நேர தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவா் (ஓஸ்மா) ஜி.அருள்மொழி வியாழக்கிழமை கூறியதாவது: ஜவுளி தொழில் துறையின் உற்பத்தி மற்றும் போட்டித் திறனைப் பாதுகாக்க உயா் மின் இணைப்பு பெற்ற தொழில் துறையினருக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் நூற்பாலைகள், ஓஇ மில்கள், பின்னலாடை உள்ளிட்ட ஜவுளித் தொழில்கள் தொடா்ச்சியான உற்பத்தி செயல்முறையை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. மின்சார விநியோகத்தில் ஏற்படும் சில மணி நேர இடையூறு உற்பத்தி மற்றும் இயந்திரப் பயன்பாடு, தொழிலாளா் திட்டமிடல் மற்றும் விநியோக அட்டவணையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஏற்கெனவே மூலப் பொருள்கள் விலை உயா்வு, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பால் தொழில் துறையினா் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், உயா் மின் இணைப்புகளுக்கு அவ்வப்போது மின்சார தடை ஏற்படுவதால் ஜவுளித் தொழிலில் உற்பத்தி பாதிக்கிறது.
எனவே, உயா் மின் இணைப்பு பெற்ற தொழில் துறையினருக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கி, உற்பத்தி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






