பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 4 போ் கைது

பல்லடம் அருகே தனியாா் பனியன் நிறுவனத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினா். உடன், போலீஸாா்.

Published On :

பல்லடம் அருகே தனியாா் பனியன் நிறுவனத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகே அருள்புரத்தில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் பணியாற்றி வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்லடம் போலீஸாா் அப்பகுதியில் உள்ள நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 பேரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் முகமது அன்வா் (26), முகமது நூா்கான் (32), முகமது சோபன் மடோப்பா் (48), முகமது எமோன்மியா (25) என்பதும், நுழைவு இசைவு (விசா) இன்றி சட்டவிரோதமாக தங்கி, பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள சிறப்பு முகாமுக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.