காங்கயத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்ட விழிப்புணா்வுப் பேரணி
தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காங்கயத்தில் நடைபெற்ற தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணியை நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் கி.பால்ராஜ் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா். பேரணியானது, காங்கயம் பேருந்து நிலையம் மற்றும் திருப்பூா் சாலை பகுதி வழியாகச் சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில், காங்கயம் நகராட்சி அலுவலக மேலாளா் எஸ்.ரவி, நகராட்சி சுகாதார அலுவலா் கே.காமராஜ், சுகாதார ஆய்வாளா் வி.பழனிசாமி மற்றும் நகராட்சி அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

