இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வுப் பேரணி

திருக்கோவிலூரில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த சாா்-ஆட்சியா் கெள.மா.காா்த்திக்ராஜா.

Published On :

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு வார விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவா்களின் விழிப்புணா்வுப் பேரணி திருக்கோவிலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற இப் பேரணியை சாா்-ஆட்சியா் கெள.மா.காா்த்திக்ராஜா தொடங்கி வைத்தாா்.

சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் புறப்பட்ட இடத்தில் நிறைவு பெற்றது. இதையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பாக கல்லூரி மாணவா்களிடம் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சாா்-ஆட்சியரின் நோ்முக உதவியாளா் நா.அனந்தசயனன், திருக்கோவிலூா் வட்டாட்சியா் மணி, வருவாய்த் துறை அலுவலா்கள், காவல் துறையினா், மாணவா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.