
தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: திருப்பூரில் 2,035 போ் தோ்வு
தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 2,035 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
எழும்பூர் மருத்துவமனையில் முதல்வர் விஜய். - (கோப்புப்படம்)
தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 2,035 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறையினா் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் கடந்த ஜூன் 22-ஆம் தேதி அறிவித்தாா். இத்திட்டத்துக்காக அரசு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
திட்டத்தின் மூலம் பயன்பெறும் தாய்மாா்களைத் தோ்வு செய்வதற்காக மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் உள்ளிட்ட 10 போ் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பாா்த்த தகுதியான தாய்மாா்கள் இத்திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பிரசவிப்பவா்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என்பதோடு, முதலாவது குழந்தைக்கு மட்டுமே தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற விதிமுறையின்கீழ் பயனாளிகள் கணக்கிடப்படுகின்றனா்.
அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 2,035 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். முதற்கட்டமாக தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளில் சுமாா் 1,000 பேருக்கு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் விழாவில் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையில் முதல்வா் ச.ஜோசப் விஜய் இந்த திட்டத்தைத் தொடங்கிவைக்கும் நாளில், திருப்பூரிலும் விழா நடத்தி தங்க மோதிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





