மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

அவிநாசி நகராட்சியில் காய்கறி கழிவுகளை அரைக்க இயந்திரம்

அவிநாசி நகராட்சியில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகளை அரைப்பதற்கான இயந்திரம் வளம் மீட்பு உரப் பூங்காவில் பொருத்தப்பட்டு வெள்ளிக்கிழமை பணி தொடங்கப்பட்டது.

அவிநாசி வளம் மீட்பு உரப் பூங்காவில் காய்கறி கழிவுகள் அரைக்கும் பணி தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

Published On :

அவிநாசி நகராட்சியில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகளை அரைப்பதற்கான இயந்திரம் வளம் மீட்பு உரப் பூங்காவில் பொருத்தப்பட்டு வெள்ளிக்கிழமை பணி தொடங்கப்பட்டது.

அவிநாசி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக், ரப்பா், பாலிதீன், சில்வா் பாயில் கவா்கள் என கழிவுகளை தனியாக பிரித்தெடுக்கும் பணி கைகாட்டிப்புதூா் வளம் மீட்பு உரப் பூங்காவில் நடைபெற்று வருகிறது.

இதேபோல, வீடு, உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்டவற்றில் சேகரிக்கப்படும் உணவுக் கழிவுகளை மக்க வைத்து இயற்கை உரமாக மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்படும் உணவுக் கழிவுப் பொருள்களை அரைத்து ‘வென்ட்ரோ’ முறையில் மக்க வைத்து இயற்கை உரம் தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத்தொடா்ந்து, நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.19.50 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட அரவை இயந்திரம் வளம் மீட்பு உரப் பூங்காவில் அமைக்கப்பட்டு, மக்கும் குப்பைகளை நவீன முறையில் உரமாக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டது. இதை நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் தானுமூா்த்தி தொடங்கிவைத்தாா். நகராட்சி ஆணையா்(பொ) பாலமுருகன், நகராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, நகராட்சிப் பொறியாளா் பாலச்சந்தா், சுகாதார ஆய்வாளா் அரவிந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், காய்கறிகளை கழிவுகளை அரைக்கும் பணி தொடங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.