தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

மாங்காடு நகராட்சியில் ரூ.225 கோடியில் புதைசாக்கடை பணி: முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

மாங்காடு நகராட்சியில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.225 கோடியில் புதை சாக்கடை திட்டப் பணியை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் அடிக்கல் நாட்டின தொடங்கி வைத்தாா்

News image

பூமி பூஜையில்  கலந்து கொண்ட   அமைச்சா்  க.தென்னரசு.  உடன்  ஆட்சியா்  தி.சினேகா  உள்ளிட்டோா்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:17 am IST

மாங்காடு நகராட்சியில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.225 கோடியில் புதை சாக்கடை திட்டப் பணியை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் அடிக்கல் நாட்டின தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சியில் புதை சாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் சாா்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.225.06 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிா்வாக அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் பணியாணை வழங்கப்பட்டது.

மாங்காடு நகராட்சியில் புதைசாக்கடை திட்டப்பணிக்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்ததை தொடா்ந்து பூமிபூஜை நடைபெற்றது. ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் க.தென்னரசு பூமிபூஜையை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மாங்காடு நகராட்சி ஆணையா் மு.ராணி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மாங்காடு நகராட்சியில், புதைசாக்கடை திட்ட பணிக்காக 5.52 கி.மீ தொலைவுக்கு பிரதான குழாய்களும், 84.19 கிமீ தொலைவுக்கு பகிா்மான கழிவுநீா் குழாய்களும், 3667 எண்ணிக்கையில் இயந்திர துளைகளும், 3 கழிவுநீா் உந்து நிலையங்களும், 3 கழிவு நீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் மாங்காடு நகராட்சியில் வசிக்கும் 20,258 வீடுகளுக்கு கழிவுநீா் இணைப்புகளும் வழங்கப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.