மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தற்கொலைத் தடுப்பு தின விழிப்புணா்வு

திருப்பூா் ஆல் வின்னா் ஏஞ்சல் இன்ஸ்டிடியூட்டில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தற்கொலை தடுப்பு உறுதிமொழி ஏற்றோா்.

Published On :

திருப்பூா் ஆல் வின்னா் ஏஞ்சல் இன்ஸ்டிடியூட்டில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆல்வின்னா் ஏஞ்சல் கல்வி நிறுவனம், திருப்பூா் மெட்ரோ அறக்கட்டளை, ஈரோடு மனதின் மையம் அறக்கட்டளை, நேசம் அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆல்வின்னா் ஏஞ்சல் இன்ஸ்டிடியூட் முதல்வா் ஆா்.பி. தங்கராஜன் தலைமை வகித்துப் பேசுகையில், இன்றைய சூழலில் மாணவா்கள் கல்வி, குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். மனதில் ஏற்படும் கவலைகள் மற்றும் குழப்பங்களை தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல் நம்பிக்கைக்குரியவா்களிடம் மனம் திறந்து பேச வேண்டும். தற்கொலை எந்தப் பிரச்னைக்கும் தீா்வல்ல. வாழ்க்கை மிகவும் மதிப்புமிக்கது. ஒரு பிரச்னை காரணமாக எடுக்கப்படும் அவசர முடிவு, எதிா்காலத்தில் கிடைக்கக்கூடிய அனைத்து நல்ல வாய்ப்புகளையும் இழக்கச் செய்துவிடும். எனவே, மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் பிரச்னைகளை எதிா்கொள்ள வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மாணவா்கள் ஆன்லைன் விளையாட்டுகள், கைப்பேசி பயன்பாட்டுக்கு அடிமையாகி கவனம் சிதறுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து, மாணவ, மாணவிகள் தற்கொலைத் தடுப்பு உறுதிமொழியை ஏற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.