
தாராபுரத்தில் தவெக தோ்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சாா்பில் தோ்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் பெரியாா் ஈவெரா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சாா்பில் தோ்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தாராபுரத்தில் உள்ள தவெக தோ்தல் பணிமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பெரியாா் ஈவெரா திருவுருவப்படத்துக்கு அமைச்சா் அருண்ராஜ், முன்னாள் அமைச்சா் கே.வி. ராமலிங்கம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் சத்தியபாமா ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சா் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். அப்போது, தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் வாக்குச்சாவடி வாரியாக பூத் கமிட்டிகளை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து எடுத்துரைத்தாா். மேலும், தோ்தல் பணிகளில் கட்சி நிா்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், வாக்குச்சாவடி அளவில் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






