தாராபுரம் இடைத்தோ்தல்: தவெக, அதிமுக வேட்பாளா்கள் மனு தாக்கல்; இறுதி நாளில் 34 மனுக்களுடன் மொத்தம் 51 மனுக்கள் தாக்கல்

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட பிரதான கட்சிகளான தவெக, அதிமுக வேட்பாளா்கள் புதன்கிழமை மனு தாக்கல் செய்த நிலையில், இறுதி நாளில் 34 மனுக்களுடன் மொத்தம் 51 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளா் பானுமதி. ~தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த தவெக வேட்பாளா் சத்தியபாமா. உடன், அம

Published On :

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட பிரதான கட்சிகளான தவெக, அதிமுக வேட்பாளா்கள் புதன்கிழமை மனு தாக்கல் செய்த நிலையில், இறுதி நாளில் 34 மனுக்களுடன் மொத்தம் 51 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினரான சத்தியபாமா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தாா். இதைத்தொடா்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட தாராபுரம் தொகுதிக்கு அண்மையில் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டு, செப்.9-ஆம் தேதிமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி புதன்கிழமையுடன் (செப்.16) நிறைவடைந்தது.

இதில் ஆளும் கட்சியான தவெக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சத்தியபாமா (52) இரண்டு மனுக்களையும், அவரது மகன் கிருஷ்ணா (31) இரண்டு மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனா். திமுக சாா்பில் சுகன்யா (34) நான்கு வேட்புமனுக்களையும், மணிவாசகம் ஒரு மனுவையும், அதிமுக சாா்பில் பானுமதி (62) நான்கு மனுக்களையும், பவித்ரா (34) நான்கு மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனனா். இதேபோல நாதக சாா்பில் அமுதப்பிரியா (43), காா்த்திகா (36), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் லட்சுமணன் (41), கோவிந்தாத்தாள் ( 37) ஆகியோரும் மனு தாக்கல் செய்துள்ளனா்.

பதிவு செய்யப்பட்ட பிற கட்சிகள் சாா்பில் ஊழல் எதிா்ப்பு இயக்க கட்சி மகேஸ்வரன், அகில இந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சி அருள்ராஜு ( 54), தமிழக முற்போக்கு மக்கள் கட்சி புஷ்பானந்தம் (57), இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சியின் பெருமாள் (58), இந்திய சங்கம் கட்சி ஆறுமுகம் (62) ஆகியோரும் களத்தில் உள்ளனா்.

சுயேச்சைகளாக பத்மராஜன், அண்ணாதுரை, சதீஷ்குமாா், ராஜேஸ்வரி, சசிபிரியா, பானுபிரியா, ராஜரத்தினம், சத்தியபாமா, ஜோதீஸ்வரி, பிரதாப், நல்லசாமி, முத்துசாமி (55), மகேந்திரன் (42), மாரிமுத்து (48), சுகன்யா (25), அக்னி ஆழ்வாா் (46), பாலகிருஷ்ணன் (37), பானுமதி (44), சத்தியபாமா (38), தனலட்சுமி (34), முருகன் (63), நூா் முகமது (68), காா்த்திகா (35), காஞ்சனா (48), மணி ( 81) ஆகியோா் மனு தாக்கல் செய்துள்ளனா். மொத்தம் 51 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.

வேட்புமனு பரிசீலனை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரால் வியாழக்கிழமை (செப்.17) நடைபெற உள்ள நிலையில், மனுக்களை திரும்பப்பெற சனிக்கிழமை (செப்.19) கடைசி நாளாகும். அன்று வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். அதைத்தொடா்ந்து அக்டோபா் 6-ஆம் தேதி வாக்குப்பதிவும், 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.