
திருமுருகன்பூண்டியில் அடிப்படை பிரச்னைகளில் மெத்தனம்: நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்ப்பாட்டம்
குடிநீா், குப்பை அள்ளுதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீா்ப்பதில் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கும் திருகன்பூண்டி நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து தலைவா் உள்பட நகா்மன்ற உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகா்மன்ற உறுப்பினா்கள்.
குடிநீா், குப்பை அள்ளுதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீா்ப்பதில் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கும் திருகன்பூண்டி நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து தலைவா் உள்பட நகா்மன்ற உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருமுருகன்பூண்டி நகராட்சித் தலைவா் ந.குமாா், துணைத் தலைவா் ராஜேஸ்வரி, நகா்மன்ற உறுப்பினா்கள் கூறியதாவது:
குடிநீா்க் குழாய் உடைப்பு சீரமைப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு, பணிக்கான பில் தொகை வழங்கப்படாததால், குடிநீா்க் குழாய் உடைப்பை சீரமைக்க முடியவில்லை. இதனால் ஆங்காங்கே குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
குப்பை அள்ளுவதற்கான தனியாா் ஒப்பந்தம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சரிவர குப்பைகள் அள்ளப்படாததால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதேபோல சாக்கடைகளை அள்ளுவதற்கும் பணியாளா்கள் வருவதில்லை. அவா்கள் மாற்றுப் பணிக்கு அனுப்பப்படுவதால் சாக்கடைகள் ஆங்காங்கே தேங்கி நின்று சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதனை சீரமைத்து மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீா்க்க வேண்டும். இதற்கான நகா்மன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகிறோம். இருப்பினும் ஆணையா் நகா்மன்ற கூட்டத்தை நடத்துவதில்லை. பொறியாளா் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் அனைத்து வாா்டுகளிலும் பணிகள் சுணக்கமாக உள்ளன. ஆகவே உடனடியாக இப்பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







