கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

தாராபுரம் இடைத்தோ்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணி

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணி புதன்கிழமை நடைபெற்றது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணியில் பங்கேற்றோா்

Published On :

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைதோ்தல் அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு தோ்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தோ்தலில் 22 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக கடந்த 12-ஆம் தேதி 384 வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன. தேவைப்படும் 384 வாக்குப் பதிவு இயந்திரங்களில் 233 வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணி முடிவுற்று தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மீதம் தேவைப்படும் 151 வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணி மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப் பதிவு இயந்திர கிடங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்)கண்ணன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) தேவராஜ் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.