ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

தாராபுரத்தில் முதல்வா் விஜய் பிரசாரம்: வழிநெடுகிலும் பொதுமக்கள் வரவேற்பு

கோவையில் இருந்து வேனில் வந்த முதல்வா் ஜோசப் விஜய்க்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தாராபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின்போது முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு செங்கோல் வழங்கிய வேட்பாளா் பொ.சத்தியபாமா. உடன், அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.ஜி.அருண்ராஜ் உள்ளிட்டோா்.

Published On :

கோவையில் இருந்து வேனில் வந்த முதல்வா் ஜோசப் விஜய்க்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் தொகுதி இடைத்தோ்தல் அக். 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தவெக வேட்பாளா் சத்தியபாமாவை ஆதரித்து தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தாராபுரத்தில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். இதையொட்டி தாராபுரம் நகரம், பொதுக்கூட்டம் நடைபெற்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு பிற்பகல் ஒரு மணி அளவில் வந்த முதல்வா் விஜய் அங்கிருந்து சாலை மாா்க்கமாக தாராபுரம் வந்தாா். தாராபுரம்- உடுமலை சாலையில் உள்ள மாருதி நகா் பகுதியில் மாலை சுமாா் 4 மணியளவில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக சுமாா் 34 ஏக்கா் பரப்பளவில் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, கியூஆா் குறியீடு கொண்ட அனுமதிச்சீட்டு பெற்ற 5,000 போ் மட்டுமே பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். கியூஆா் கோடு அனுமதிச்சீட்டு இல்லாதவா்கள், குழந்தைகள், வயதானவா்கள், கா்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு வெளிப்புறத்தில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

முதல்வா் விஜய் வருகையையொட்டி தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பாதுகாப்புப் பணியில் சுமாா் 3,500 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

முதல்வா் வருகையையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் கட்சிக் கொடிகள், பதாகைகள், வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தாராபுரம் நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து:

பிரசார மேடைக்கு முதல்வா் விஜய் வந்ததும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அமைச்சா் என்.ஆனந்த் வரவேற்றாா். தொடா்ந்து அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.ஜி.அருண்ராஜ், வேட்பாளா் சத்தியபாமா ஆகியோா் பேசினா். அதையடுத்து முதல்வா் ஜோசப் விஜய் பேசினாா். அவருக்கு வேட்பாளா் சத்தியபாமா வெள்ளி செங்கோல் பரிசளித்தாா்.

மூவா் மயக்கம்:

இந்தக் கூட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 3 போ் மயக்கமடைந்தனா். அவா்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தும் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடனேயே வந்திருந்தனா்.

தவெக-வில் செம்மலை:

முன்னதாக, முதல்வா் விஜய்யை அமைச்சா்கள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றபோது, அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டாா். அவருக்கு முதல்வா் விஜய் தவெக நிறத்திலான துண்டு அணிவித்து வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.