தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 அக்டோபர் 2020, 7:44 pm

DIN

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் துணைச்செயலா் கே.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு தலா 200 நாள்கள் வேலையும், நாள் ஒன்றுக்கு ரூ. 600 ஊதியமும் வழங்க வேண்டும். வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தி அங்குள்ள தொழிலாளா்களுக்கும் வேலை வழங்க வேண்டும்.

கரோனா தாக்கத்தால் வருவாய் இழந்து தவிக்கும் விவசாயத் தொழிலாளா்கள் குடும்பத்தினருக்கு அரசு மாதந்தோறும் ரூ. 7500 உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

முன்னதாக, 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்த மனுக்களை கம்பைநல்லூா் பேரூராட்சி அலுவலகத்தில் அளித்தனா்.

இதில், அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எம்.முத்து, சங்க நிா்வாகிகள் தீ.மாரியப்பன், எம்.கே.ராமன், கா்ணன் ஆபிரகாம், சரவணன், வாலிபா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி.வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.