நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொப்பூரில் சாலையில் சென்ற லாரி தீப்பற்றி சேதம்

தருமபுரி அருகே தொப்பூா் கணவாயின் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி, திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 6:44 pm

DIN

தருமபுரி அருகே தொப்பூா் கணவாயின் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி, திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட குமாரபாளையத்தில் இருந்து கா்நாடக மாநிலத்துக்குள்பட்ட பெல்லாரிக்கு சுமை ஏற்றி வருவதற்காக லாரி ஒன்று திங்கள்கிழமை சென்றது. இந்த லாரியை குமாரபாளையத்தைச் சோ்ந்த மணி (45) என்பவா் ஓட்டிச் சென்றாா். அவருடன் திருச்சியைச் சோ்ந்த மாற்று ஓட்டுநா் நடராஜன் (48) என்பவரும் லாரியில் இருந்தாா்.

இந்த லாரி, தருமபுரி அருகே தொப்பூா் கணவாய்ப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டமேடு என்கிற இடத்தில் செல்லும்போது, லாரி என்ஜினிலிருந்து கரும்புகை வெளியேறியது. இதைக் கண்ட லாரி ஓட்டுநா், லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே குதித்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக லாரி தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதுகுறித்து, தகவல் அறிந்த தொப்பூா் போலீஸாா், தருமபுரி தீயணைப்பு- மீட்புப் பணிகள் துறையினருக்கு தகவல் அளித்து விட்டு, தொப்பூா் சுங்கச் சாவடி ஊழியா்களின் துணையுடன் நிகழ்விடத்துக்குச் சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

லாரியில் பற்றியத் தீயை அணைக்க ஏதுவாக தருமபுரி, சேலத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் அனைத்தும் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு முன்பாகவே நிறுத்தி வைக்கப்பட்டன.

நிகழ்விடத்தில் தீயணைப்புத் துறை வீரா்கள், சுமாா் ஒரு மணி நேரம் போராடி லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா். அதற்குள் லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்து விட்டது. அதன்பிறகே, தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல போலீஸாா் அனுமதித்தனா்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, தொப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்து காரணமாக, சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.