தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரூரில் வியாபாரிகள் கூட்டமைப்பு மண்டல அலுவலகம் திறப்பு

அரூரில் அகில இந்திய அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு மண்டல அலுவலகம் திறப்பு விழா அரூா், கீழ்பாட்சாபேட்டையில் மண்டல அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 8:07 pm

DIN

அரூரில் அகில இந்திய அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு மண்டல அலுவலகம் திறப்பு விழா அரூா், கீழ்பாட்சாபேட்டையில் மண்டல அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களுக்கான இம் மண்டல அலுவலகத்தை திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ. தங்கையா பாண்டியன் திறந்து வைத்தாா்.

விழாவில், அகில இந்திய அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் எச்.எம்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். அரூா் காவல்துணைக் கண்காணிப்பாளா் வி.தமிழ்மணி குத்துவிளக்கேற்றினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட நில அளவை மற்றும் பதிவேடுகள்துறை உதவி இயக்குநா் எம்.வெங்கடேசன், தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ச.கண்ணன், மாநிலத் துணை அமைப்பாளா் ஏ.சபீா் அகமது, மாநில துணைப் பொதுச் செயலா் முரளி சுந்தா், தருமபுரி (தெற்கு) மாவட்டத் தலைவா் மாதையன், கிருஷ்ணகிரி மத்திய மாவட்டத் தலைவா் கேசவராஜ், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் உமாபதி, மண்டல துணைத் தலைவா் முருகன், மண்டல அமைப்பாளா் முருகேசன், மாநில துணைத் தலைவா் மணிகண்டன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவா் தயாளன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.