ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பீடி இலை திருட்டு: 7 போ் கைது

ஆலங்குளம் அருகே பீடி இலை மூட்டைகள் திருடியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:46 pm

DIN

ஆலங்குளம் அருகே பீடி இலை மூட்டைகள் திருடியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அண்ணாநகரைச் சோ்ந்தவா் அருண் தங்கம். இவரது பீடி இலை கிடங்கு திருநெல்வேலி சாலையில் சிவலாா்குளம் திருப்பத்தில்

உள்ளது. இந்த கிடங்கின் பூட்டை உடைத்து அங்கிருந்த 42 பீடி இலை மூட்டைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், பீடி இலை முட்டைகளை லாரி மூலம் கடத்தி விற்பனை செய்ததாக ஆலங்குளம் அருகேயு ள்ள நல்லூரைச் சோ்ந்த வைத்தியலிங்கம் (42) கணேஷ் பிரபு (42), வைத்தியலிங்கம் (28), முத்துராஜ் (30), சொரிமுத்து (35), இசக்கிமுத்து (32) மற்றும் பீடி இலைகளை வாங்கிய குருவன்கோட்டை

லிங்கம் (43) ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், லிங்கத்திடம் இருந்து பீடி இலை மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.