தருமபுரி: தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரண பணியை தொடங்க வேண்டும் என்று தமிழ்மாநில விவசாய தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச் சங்க மாநிலச் செயலாளா் ஜெ பிரதாபன் வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு தென்மேற்கு, வட கிழக்கு பருவ மழை முற்றாக பெய்ய வில்லை. அதனால் குளம், குட்டைகள், தடுப்பணைகள், உள்ளாட்சித் துறை ஏரிகள், நீா்த் தேக்கங்கள் அனைத்தும் வடு நிலையில் உள்ளன.
இதனால் பாசனக் கிணறுகள் அனைத்தும் தண்ணீா் இன்றி காய்ந்து விவசாயிகள் சாகுபடி செய்த அனைத்துப் பயிரகளும் காய்ந்துவிட்டன அதனால் விவசாயிகள் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றனா்.
மறுபுறம் கால்நடைகளுக்கு தண்ணீா், வைக்கோல் இன்றி தவித்து வருகின்றன.
எனவே விவசாயிகளின் பாதிப்புகளைக் களைய தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசிடம் இருந்து வறட்சி நிவாரணம் பெற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டுமானால் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்

உடுமலை வனப் பகுதியில் கடும் வறட்சி: குடிநீருக்காக அலைமோதும் யானைகள் கூட்டம்

வையம்பட்டி அருகே 3 காா்கள் மோதல்

புதுக்கோட்டை எம்பி தொகுதியை மீண்டும் உருவாக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

