பெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

புதுக்கோட்டை எம்பி தொகுதியை மீண்டும் உருவாக்கக் கோரிக்கை

News image
நாடாளுமன்றம்- (கோப்புப் படம்)
Updated On :8 மார்ச் 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையின்போது புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் உருவாக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சட்டம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை அமைக்க வேண்டும்.

மாவட்டத்தின் இயற்கை வளத்தை சீரழிக்கும் தைலமரக் காடுகளை அழிக்க வேண்டும். காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். மகாதீா் உள்ளிட்டோா் பேசினா்.