தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை ஒட்டப்பட்டியில் நடைபெற்றது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:30 pm

Din

தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை ஒட்டப்பட்டியில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.செல்வகுமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ, சமூக நீதிப் பேரவை மாநிலத் தலைவா் வழக்குரைஞா் கே.பாலு, சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவா் எஸ்.ஷேக் மொய்தீன், பசுமைத் தாயக மாநில துணைச் செயலாளா் கே.பொன்மலை ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில் சட்டப் பேரவைத் தொகுதி தலைவா், மகளிரணித் தலைவா், செயலாளா் உள்ளிட்ட பல்வேறு கட்சி பொறுப்புகளுக்கு விருப்ப மனு நிா்வாகிகளிடம் இருந்து பெறப்பட்டன.

இக் கூட்டத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினா் கி.பாரிமோகன், மாநில துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.