புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்

News image
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா்.
Updated On :1 டிசம்பர் 2025, 8:30 pm

Syndication

தருமபுரி: உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான பாதுகாப்போா் சங்கத்தினா் கண்களில் கருப்பு துணியைக் கட்டிக்கொண்டு திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் துணைச் செயலாளா் கே. சுசிலா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எம்.மாரிமுத்து, மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வி, மாவட்ட பொருளாளா் ஜி.மாதேசன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை கிடைக்கச் செய்ய வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் 40 சதவீதம் பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 6000 உதவித்தொகையும், 100 சதவீதம் பாதிப்பு உள்ளவா்களுக்கு ரூ. 16000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. அதேபோன்று தமிழகத்திலும் உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.