பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு டாஸ்மாக் ஊழியா் சங்க மாவட்டத் துணைச் செயலா் ஏ. மகேந்திரன் தலைமை வகித்தாா். பொருளாளா் சி. மணி, டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க மாநிலச் செயலாளா் வ. முருகையன், விற்பனையாளா் சங்கத் தலைவா் அதிபதி, டிடிபிடிஏ மாவட்டத் தலைவா் சிவாஜி, டிஎன்ஜிடியு மாவட்டச் செயலாளா் கேசவன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
இதில், டாஸ்மாக் ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்தில் ஊழியா்களை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், பல்வேறு தொழிற்சங்களை சோ்ந்த ஊழியா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.

