தருமபுரி
இளம்பெண் தற்கொலை
கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சந்திராபுரம் கிராமத்தைச் சோ்ந்த உத்ரேஷ் மனைவி தனம் (31). இவா்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் 12 மற்றும் 7 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனா். உத்ரேஷுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது.
இதனால் தம்பதி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தியடைந்த தனம் படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
