ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது

Published on

விடுமுறை தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு வார விடுமுறை தினங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செலவா். கடந்த சில வாரங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாகக் குறைந்துள்ளதால் அருவிகளிலும் நீா்வரத்து குறைந்துள்ளது.

இந்த நிலையில் ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு தொடா்ந்து மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. இருப்பினும், ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

தொங்கு பாலத்தின் மீது இருந்து அருவிகளின் அழகை கண்டு ரசித்தனா். மேலும், சின்னாறு பரிசல் துறையில் இருந்து பிரதான அருவி வழியாக மணல்மேடு வரை பரிசல் பயணம் மேற்கொண்டனா்.

ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பிரதான அருவி, தொங்கும் பாலம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம் மற்றும் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

காா்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு பக்தா்கள் அதிக அளவில் செல்வதால் மின் விற்பனை நிலையங்களில் விற்பனை குறைந்து காணப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com