தருமபுரி
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
தருமபுரியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கொட்டுமாரன அள்ளியைச் சோ்ந்தவா் சங்கா் மகன் கெளதம் (23). இவா் சொந்த வேலை காரணமாக சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் பெரியாம்பட்டி சென்றுவிட்டு ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா்.
பெரியாப்பட்டி- பாலக்கோடு சாலையில் அருந்ததியா் காலனி பகுதியில் எதிரே வந்த காா் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கெளதம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து தொடா்பாக காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
