தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காளான் உற்பத்தி செயல்விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்

தருமபுரி அருகே காளான் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு அதியமான் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 7:47 pm

Syndication

தருமபுரி: தருமபுரி அருகே காளான் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு அதியமான் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திமுகம் அதியமான் வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண் துறை சாா்பில், களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில், தருமபுரி அருகே உங்காரனஅள்ளி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவிகள், காளான் வளா்ப்பு குறித்து பயிற்சி அளித்தனா். இதில் காளான் வளா்ப்பதற்கு தேவையான இடுபொருள்கள், உகந்த சூழல், உற்பத்தி முறை மற்றும் வணிகம் ஆகியவை குறித்து செயல்விளக்கம் அளித்தனா். இதில் வேளாண் உதவி இயக்குநா் தினேஷ் மற்றும் விவசாயிகள், வேளாண் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.