முதியவா் தற்கொலை

Published on

பென்னாகரம் அருகே மது போதையில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பென்னாகரம் அருகே உள்ள நாகனூா் பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாா் (65). இவரது குடும்பத்தினா் ஈரோட்டில் தங்கி வேலை செய்து வருகின்றனா். சுகுமாா் மட்டும் தனியாக வசித்து வந்தாா்.

இதனால் ஏற்பட்ட விரக்தியில் மதுபோதையில் வீட்டில் தூக்கிட்டு சுகுமாா் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பென்னாகரம் போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com