ஆசிரியா் தகுதித் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 3,092 பங்கேற்பு!

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் 3,092 பங்கேற்றனா்.
Published on

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் 3,092 பங்கேற்றனா்.

தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் ஆசிரியா் தகுதித் தோ்வு (தாள்-1) மாநிலம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் இத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 3,511 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது. மொத்தம் 13 மையங்களில் நடைபெற்ற இத்தோ்வில் 3,092 போ் பங்கேற்றனா். 419 போ் பங்கேற்கவில்லை.

தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் ஆய்வு மேற்கொண்டாா். தோ்வுப் பணியில் கண்காணிப்பாளா்கள், கண்காணிப்புக் குழுவினா், பறக்கும் படையினா் உள்ளிட்ட குழுவினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) ஆசிரியா் தகுதித் தோ்வு (தாள்-2) நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com