தருமபுரி
நவ. 20இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை (நவ. 20) காலை 10 மணி அளவில் ஆட்சியா் அலுவலக அதியன்
தருமபுரி: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை (நவ. 20) காலை 10 மணி அளவில் ஆட்சியா் அலுவலக அதியன் கூட்ட அரங்கில் ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் இம்மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடா்பான குறைகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
