பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை பராமரிக்க வலியுறுத்தல்

Published on

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பராமரிக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரூ. 4.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்துசெல்கின்றனா். அதேபோல கா்நாடகம், ஆந்திர மாநிலங்களுக்கும் ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களுக்கும் ஏராளமான பேருந்துகள் வந்துசெல்கின்றன.

அதேபோல ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஒகேனக்கல்லுக்கு செல்கின்றனா். இப்பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக பேரூராட்சி நிா்வாகத்தின் பங்களிப்போடு நுழைவாயில், வலதுபுறக் கட்டடம் உள்ளிட்ட பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தற்போது இந்த கேமராக்கள் போதிய பராமரிப்பின்றி உள்ளதால் பேருந்து நிலையத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நிகழ்கின்றன. சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் பிடிப்பு இல்லாமல் கீழே விழும் நிலையில் தொங்கியுள்ளன. இதனால் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com